புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் யு மும்பா திரில் வெற்றி


புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் யு மும்பா திரில் வெற்றி
x

image courtesy:twitter/@ProKabaddi

இதில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினம்,

12-வது புரோ கபடி லீக் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் யு மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 40-39 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை பெற்றது.

நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் தபாங் டெல்லி 38-28 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது.

நேற்றுடன் விசாகப்பட்டினத்துக்கான சுற்று நிறைவடைந்தது. அடுத்த கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story