

பெங்களூரு,
8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது
மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்- புனேரி பல்டன் அணிகள் மோத உள்ளன.