புரோ கபடி லீக்: எலிமினேட்டர் சுற்றில் யுபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்

மற்றொரு சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதுகின்றன.
புரோ கபடி லீக்: எலிமினேட்டர் சுற்றில் யுபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்
Published on

பெங்களூர்,

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. தமிழ் தலைவாஸ் 47 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் 1 சுற்றில் உபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. எலிமினேட்டர் 2 சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணிகள் நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி அணியுடன் மோதவுள்ளன.

இறுதிப்போட்டியானது வரும் 25-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com