ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை ஜோஷ்னாவுக்கு பதவி உயர்வு

ஆணையினை, இன்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு நேரில் வழங்கினார்.
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை ஜோஷ்னாவுக்கு பதவி உயர்வு
Published on: 

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் பதக்கங்கள் வென்று சாதனைகள் படைத்துள்ள ஜோஷ்னா சின்னப்பா அவர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின், விளையாட்டுத் துறை இயக்குநராகப் பதவி உயர்வு அளித்து 09.10.2026 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையினை, இன்று (10.10.2026) பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு நேரில் வழங்கினார்.

விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கமும், அதே ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர். மேலும், இந்திய அளவில் ஸ்குவாஷ் விளையாட்டில் முதலிடம் பெற்ற பெருமைக்குரியவர். விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் நேரடி நியமனம் மூலம் மூத்த விளையாட்டு அலுவலராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், அவரது பதவி விளையாட்டுத் துறை துணை இயக்குநராக மாற்றப்பட்டது.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி-2026 ல் இந்திய ஸ்குவாஷ் அணிக்காகப் பங்கேற்று 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். சென்னையில் 8.10.2026 அன்று நடைபெற்ற அரசு விழாவில் விளையாட்டு வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூபாய் 60 லட்சத்திற்கான உயரிய ஊக்கத் தொகையை வழங்கி கௌரவித்தார். விளையாட்டுத் துறையில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வரும் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவின் பதவி உயர்வு, தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com