உலக தர வரிசையில் 2-ம் இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்திய பி.வி. சிந்து; வைரலான வீடியோ

சிந்து நாளை நடைபெறும் போட்டியில், இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொள்கிறார்.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், உலக தர வரிசையில் 2-ம் இடம் வகிக்கும் சீன வீராங்கனையான வாங் ஜி யி மற்றும் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான பி.வி. சிந்து ஆகியோர் இன்று விளையாடினர்.
போட்டியில் சிந்து, சீன வீராங்கனை வாங்கை எப்படி எதிர்கொள்ள போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், சிந்து திறமையை வெளிப்படுத்தி 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். காலிறுதிக்கும் முன்னேறினார்.
வாங்கை வீழ்த்தியபோது, தனக்கே உரிய பாணியில் அவர் கர்ஜனை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுபற்றிய வீடியோவும் வைரலாகி வருகிறது. நாளை நடைபெறும் போட்டியில், இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை, சிந்து எதிர்கொள்கிறார்.
Related Tags :
Next Story






