மஞ்சள் ஆடையில் அசத்தல் ஆட்டம் போட்ட பி வி சிந்து! இணையத்தில் வைரலாகும் வீடியோ

உலகின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்து அந்த பாடலுக்கு ஆடி வீடியோவாக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மஞ்சள் ஆடையில் அசத்தல் ஆட்டம் போட்ட பி வி சிந்து! இணையத்தில் வைரலாகும் வீடியோ
Published on

ஐதராபாத்,

வங்காள மொழிப் பாடலான கச்சா பாதாம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளது.உலகின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்து அந்த பாடலுக்கு ஆடி வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இப்போது இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை இதுவரை 30 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். 4.6 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

இந்த பாடலை பாடி, மேற்கு வங்கத்தை சேர்ந்த பூபன் பத்யாகர் என்ற கடலை வியாபாரி ஒரே இரவில் பிரபலமானார். அவர் தனது வியாபாரத்தை பெருக்குவதற்காக பிரபல பாடலான கச்சா பாதாம் பாடலை ஒற்றை வரியாக மாற்றி அந்த பாடலை பாடி கடலை விற்றார்.அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்தது.

அதன்பின், அந்த பாடலை இசையமைப்பாளர் நஸ்மு ரீசட் ரீமிக்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இப்போது அந்த பாடல் பலரையும் ஆட்டம் போட வைத்துள்ளது. அதற்கு சிந்துவும் விதிவிலக்கல்ல!

View this post on Instagram

A post shared by Sindhu Pv (@pvsindhu1)

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com