உலக பேட்மிண்டன் சம்மேளனத்தில் பி.வி.சிந்துவுக்கு முக்கிய பொறுப்பு


உலக பேட்மிண்டன் சம்மேளனத்தில் பி.வி.சிந்துவுக்கு முக்கிய பொறுப்பு
x
தினத்தந்தி 25 Dec 2025 4:45 PM IST (Updated: 25 Dec 2025 5:08 PM IST)
t-max-icont-min-icon

பி.வி சிந்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை,

உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.வி.சிந்து 2017 முதல் இந்த கமிஷனில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார் மற்றும் 2020 முதல் உலக பேட்மிண்டன் சம்மேளன இன்டெக்ரிட்டி அம்பாசிடராகவும் இருந்து வருகிறார்.

இந்தியாவுக்காக பி.வி சிந்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story