ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் கால் இறுதி ஆட்டத்தில் பிவி சிந்து தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் கால் இறுதி ஆட்டத்தில் பிவி சிந்து தோல்வி அடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் கால் இறுதி ஆட்டத்தில் பிவி சிந்து தோல்வி
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியா ஓபன் பெட்மிண்டன் கடந்த 20ம் தேதி சிட்னியின் தொடங்கியது. இந்த தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிந்துவும் சீன தய்பேயின் தை சூ யிங்கும் மோதினர்.

இப்போட்டியில் 10-21, 22-20, 21-16 என்ற புள்ளி அடிப்படையில் தை சூ யிங் வெற்றி பெற்றார்.

முதல் சுற்றில் 10-21 என்கிற புள்ளி அடிப்படையில் எளிதில் வெற்றி பெற்றார். அதன் பின் சுதாரித்து கொண்ட தை சூ தனது முழு திறமையை வெளிகாட்டினார்.

இரண்டாவது சுற்றில் இருவரும் கடின ஆட்டத்தை காட்டினர். இறுதியில் 22-20 புள்ளிகள் பெற்று தை சூ வென்றார். மூன்றாவது சுற்றில் 21-16 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார் தை சூ.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com