

* இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடரில் 41 முறை சாம்பியனான மும்பை அணி தனது முதலாவது லீக்கில் பரோடோவை வருகிற 9-ந்தேதி வதோதராவில் சந்திக்கிறது. இந்த போட்டிக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் அய்யர் இல்லாத சமயங்களில் தவால் குல்கர்னி கேப்டனாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது டெஸ்ட் போட்டிகள் இல்லாததால் அஜிங்யா ரஹானே மும்பை அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல் ஊக்கமருந்து சர்ச்சையால் 8 மாதங்கள் தடையை அனுபவித்த இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கும் இடம் கிடைத்துள்ளது.