செஸ் விளையாடிய போது சிறுவனின் கைவிரலை உடைத்த ரோபோ - வைரல் வீடியோ

சிறுவனின் கை விரலை ரோபோ உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Image Courtesy : Screengrab from Twitter 
Image Courtesy : Screengrab from Twitter 
Published on

மாஸ்கோ,

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் கடந்த 19 ஆம் தேதி செஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விளையாடிய 7 வயது சிறுவனின் கை விரலை ரோபோ உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் அந்த பதிவில் சிறுவன் ஒருவன் ரோபாவுடன் செஸ் விளையாடுகிறான். இருவரும் தங்களுக்கான முறையில் சரியான நேரத்தில் காய்களை நகர்த்தி வந்தனர். அப்போது திடீரென சிறுவன் காயை நகர்த்தி கை விரலை வைத்திருந்த இடத்தில் அந்த ரோபோ உடனே அதே இடத்தில் காயை வைத்தது. இதனால் அந்த 7 வயது சிறுவனின் கைவிரலை ரோபோ நசுக்கியது.

வலியால் அந்த சிறுவன் அருகில் இருந்தவர்களை அழைக்க ரோபோவின் பிடியில் இருந்த சிறுவனின் கையை போராடி மீட்டனர். இந்த நிகழ்வு குறித்து மாஸ்கோ செஸ் சம்மேளனம் கூறுகையில், "ரோபோ இதற்கு முன்பு பல போட்டிகளில் இது போன்று நிகழாமல் சிறப்பாக விளையாடியுள்ளது. ஆனால் இன்று ரோபோ அதன் நகர்வை முடிக்கும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக அந்த சிறுவன் நகர்தல் மேற்கொண்டான்.

ரோபோக்கள் உடன் விளையாடுவதற்கென சில பாதுகாப்பு விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த சிறுவன் அதை மீறிவிட்டான். அவன் தனது நகர்வைச் செய்தபோது முதலில் காத்திருக்க வேண்டும்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com