கணவரை பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு


கணவரை பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு
x

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்

ஐதராபாத்,

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 35). இவர் பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.

இதனிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி கஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதரபாத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக சாய்னா அறிவித்துள்ளார். கணவர் கஷ்யப்பை பிரிவதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்து பிரிவதாக அறிவித்துள்ளார். கஷ்யப்பை பிரிவதற்கான காரணம் குறித்து சாய்னா எதுவும் தெரிவிக்கவில்லை.

1 More update

Next Story