பேட்மிண்டன் தரவரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி 'நம்பர் ஒன்' இடத்துக்கு முன்னேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளனர்.
பேட்மிண்டன் தரவரிசையில் சாத்விக்-சிராக் ஜோடி 'நம்பர் ஒன்' இடத்துக்கு முன்னேற்றம்
Published on

புதுடெல்லி,

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி இரு இடம் முன்னேறி 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்கும் முதல் இந்திய ஜோடி இவர்கள் தான். ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் அவர்கள் ஏற்றம் அடைந்துள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து இரு இடம் உயர்ந்து 13-வது இடம் வகிக்கிறார். காயத்தால் ஓய்வில் இருக்கும் சாய்னா நேவால் 55-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஒரு இடம் குறைந்து 8-வது இடத்தை பெற்றுள்ளார். லக்ஷயா சென் 15-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 20-வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com