மாநில ஜூனியர் போட்டிக்கான சென்னை மாவட்ட கைப்பந்து அணிகள் 7-ந் தேதி தேர்வு

மாநில ஜூனியர் போட்டிக்கான சென்னை மாவட்ட கைப்பந்து அணிகள் தேர்வு 7-ந் தேதி நடக்கிறது.
மாநில ஜூனியர் போட்டிக்கான சென்னை மாவட்ட கைப்பந்து அணிகள் 7-ந் தேதி தேர்வு
Published on

சென்னை,

மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சேலத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 7-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.

1-1-2006 மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் ஆதார் அட்டை உள்ளிட்ட தகுந்த வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com