வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல்: துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சஸ்பெண்ட்

கோப்புப்படம்
வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர் அங்குஷ் பரத்வாஜ். முன்னாள் வீரரான இவர் மீது இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அந்த வீராங்கனை பரத்வாஜிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு பரத்வாஜ் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். கடந்த 1-ந்தேதி வீராங்கனை இதுகுறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அரியானா மாநிலம் பரிதாபாத் போலீசார் பரத்வாஜ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து தேசிய ரைபிள் சங்கம் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது. இது குறித்து தேசிய ரைபின் சங்க செயலாளர் ராஜிவ் பாட்டியா கூறியதாவது:-
ஒழுங்கீனத்துக்காக பரத்வாஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விளக்க நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை அவர் எந்த பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






