துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

இந்திய வீரர் குர்ஜோத் சிங் கங்குரா 70 புள்ளிகளுடன் 33-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.
துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர்கள் ஏமாற்றம்
Published on

அல்மட்டி,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ஷாட்கன்) கஜகஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவின் தகுதி சுற்றில் முதல் நாளில் நடந்த 3 ரவுண்டுகள் முடிவில் இந்திய வீரர் மைராஜ் அக மது கான் 75-க்கு 71 புள்ளிகளுடன் 27-வது இடமும், மற்றொரு இந்திய வீரர் குர்ஜோத் சிங் கங்குரா 70 புள்ளிகளுடன் 33-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

மற்ற இந்திய வீரர்களான ஆனந்த்ஜீத் சிங் நருகா (69 புள்ளி), ரைசா தில்லான் (69 புள்ளி), பரினாஸ் தலிவால் (66 புள்ளி) ஆகியோரும் சோபிக்கவில்லை. எஞ்சிய இரண்டு ரவுண்டு பந்தயங்கள் 2-வது நாளான இன்று தொடர்ந்து நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com