துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை சம்ரா தங்கம் வென்றார்.
துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
Published on

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இன்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 18பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் இறுதிப்போட்டியில் சிஃப்ட் கௌர் சாம்ரா 469.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனை 462.3 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனை ஆஷி சோக்ஷிக் 451.9 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com