

கெய்ரோ,
எகிப்தின் கெய்ரோவில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
ருத்ராங்க்ஷ் பாட்டீல், அர்ஜுன் பாபுதா மற்றும் கிரண் ஜாதவ் அடங்கிய இந்திய அணி இறுதி போட்டியில் 16-10 என்ற கணக்கில் சீனா அணியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஐந்தாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
அதே நேரத்தில் மெஹுலி கோஷ், இளவேனில் வாலறிவன் மற்றும் மேகனா அடங்கிய இந்திய பெண்கள் அணி (10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு) ஜெர்மனியை 17-11 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.