உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்ற இந்திய ஜோடி

பலாக்- முகேஷ் நெலவள்ளி ஜோடி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்ற இந்திய ஜோடி
Published on

கிரனடா,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் கிரனடாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் முத லில் தகுதி சுற்று நடந்தது. இதில் பங்கேற்ற 42 ஜோடிகளில் முதல் 4 இடத்தை பிடித்தவர்கள் இறுதிசுற்றுக்கு முன்னேறினர்.

தகுதி சுற்றில் 2-வது இடத்தை பெற்ற இந்தியாவின் இளம் நட்சத்திரங் கள் பலாக்- முகேஷ் நெலவள்ளி ஜோடி இறுதி ஆட்டத்தில் 487.7 புள்ளி களுடன் முதலிடத்தை பிடித்து, புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றது. சீனாவின் கியான்ஸன் யாவ்- காய் ஹூ ஜோடி வெள்ளிப்பதக்கத்தையும் (484.8 புள்ளி), ஹங்கேரியின் வெரோ னிகா மேஜர்- அகோஸ் கரோலி இணை வெண்கலப்பதக்கமும் (414.9 புள்ளி) கைப்பற்றியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com