இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து தோல்வி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, போர்ன்பாவீ சோச்சுவோங்குடன் மோதினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, உலகின் 8-வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை போர்ன்பாவீ சோச்சுவோங்குடன் மோதினார்.

1 மணி 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி. சிந்து 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் சோச்சுவோங்கிடம் தோல்வியடைந்தார். தோல்வி குறித்து பேசிய பி.வி. சிந்து, "மூன்றாவது செட்டில் நான் 16-13 என முன்னிலையில் இருந்தேன். அதை நான் வெற்றியாக மாற்றியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒட்டுமொத்தமாக எனது ஆட்டத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த போட்டியிலிருந்தும் இந்த தொடரிலிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com