சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்

இந்திய வீரர் லக்ஷயா சென், சீனாவின் லு குயாங் சூவை சந்திக்கிறார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
Published on

சிங்கப்பூர்,

மொத்தம் ரூ.9.5 கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் காமன்வெல்த் சாம்பியனான இந்திய வீரர் லக்ஷயா சென், சீனாவின் லு குயாங் சூவை சந்திக்கிறார். இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன் ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற விக்டர் லாயுடன் (கனடா) மோதுகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான புத்ரி குசுமா வர்தா னியுடன் (இந்தோனேசியா) தனது சவாலை தொடங்குகிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ' ஷெட்டி உள் ளிட்ட இந்திய ஜோடிகள் களம் காணுகின்றன

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com