சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

சென்னை,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-19, 21-18 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் கிம் வோன் ஹோ-சியோ சியூங் ஜே கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜார் அல்பியான்-முகமது ஷோஹிபுல் பிக்ரிஇணையை சந்திக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com