சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, மலேசியாவின் கோக் செ பெய்-நூர் இஸ்லாதீன் ஜோடியை எதிர்கொண்டது.

தொடக்கம் முதலே அருமையாக செயல்பட்ட சாத்விக் -சிராக் கூட்டணி 21-17, 21-15 என்ற நேர்செட்டில் கோக் பெய்-நூர் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com