சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : 2-வது சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் 2-வது சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா மரின் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பற்றிய நிலையில், அடுத்த இரு செட்டுகளையும் கரோலினா கைப்பற்றி சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் கரோலினா 13-21, 21-11 மற்றும் 22-20 என்ற செட் கணக்கில் சிந்துவுக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com