சிங்கப்பூர் ஓபன்: பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

சிந்து அடுத்து, ஜப்பானின் ரிகோ குஞ்சியை எதிர்த்து விளையாட உள்ளார்.
சிங்கப்பூர் ஓபன்:  பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

புதுடெல்லி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் சிங்கப்பூரில் உள்ள உள்ளரங்கில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை எதிர்த்து விளையாடினார்.

இதில் சிந்து, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆடவர் இரட்டையர் போட்டி ஒன்றில் இந்திய வீரர்களான சாத்விக்-சிராக் ஜோடி, சென் ஜி யி மற்றும் பிரெஸ்லி ஸ்மித் ஜோடியை எதிர்த்து விளையாடினர்.

இதில், 26-28, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இவர்களில் சிந்து அடுத்து, ஜப்பானின் ரிகோ குஞ்சியை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீன தைபேவின் லீ ஜே-ஹுவெய் மற்றும் யாங் போ-சூவான் ஜோடியை எதிர்த்து விளையாட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com