இந்திய விளையாட்டு கழகத்தின் மத்திய மண்டல மைய பொறுப்பு இயக்குனராக ராஜேந்திர சிங் இன்று பதவியேற்பு

இந்திய விளையாட்டு கழகத்தின் மத்திய மண்டல மைய பொறுப்பு இயக்குனராக ராஜேந்திர சிங் இன்று பதவியேற்று கொண்டார். #SportsAuthorityOfIndia
இந்திய விளையாட்டு கழகத்தின் மத்திய மண்டல மைய பொறுப்பு இயக்குனராக ராஜேந்திர சிங் இன்று பதவியேற்பு
Published on

போபால்,

புதுடெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு கழகத்தின் தலைமையகத்தின் இயக்குனராக (அணிகள்) பதவி வகித்தவர் ராஜேந்திர சிங். இவர் புதுடெல்லியில், இந்திய விளையாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கான விளையாட்டுகளை நடத்துவதற்கான இணை தலைமை செயல் அதிகாரி மற்றும் தொழில் நுட்ப குழுவின் உறுப்பினர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்திய விளையாட்டு கழகத்தின் மத்திய மண்டல மையத்தின் பொறுப்பு இயக்குனராக சிங் இன்று பதவியேற்றார்.

அதன்பின்னர், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கார் மாநிலங்களில் விளையாட்டு மற்றும் இளைஞர்நல துறை மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளும், இந்த பகுதியில் விளையாட்டுகள் வளர்ச்சி அடைவதற்கு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com