பேட்மிண்டன் தரவரிசையில் சவுரப் வர்மா முன்னேற்றம்

பேட்மிண்டன் தரவரிசையில் சவுரப் வர்மா முன்னேறி உள்ளார்.
பேட்மிண்டன் தரவரிசையில் சவுரப் வர்மா முன்னேற்றம்
Published on

புதுடெல்லி,

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் சவுரப் வர்மா 7 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தை பிடித்துள்ளார். சையத் மோடி சர்வதேச போட்டியில் இறுதிப்போட்டிக்கு வந்ததன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான சவுரப் வர்மாவின் சிறந்த தரநிலை இதுவாகும். மற்ற இந்திய வீரர்கள் சாய் பிரனீத் 11-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 12-வது இடத்திலும், காஷ்யப் 23-வது இடத்திலும், சமீர் வர்மா 26-வது இடத்திலும், பிரனாய் 27-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். தரவரிசையில் டாப்-30 இடத்திற்குள் 6 வீரர்களை கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா தான். இந்த வகையில் சீன வீரர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர்.

பெண்கள் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 6-வது இடமும், சாய்னா நேவால் 10-வது இடமும் வகிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com