பாடிபில்டர் சாம்பியன் போட்டியில் குட்டிக்கரணம் அடித்த வீரர் கழுத்து உடைந்து பலி-வீடியோ

பாடிபில்டர் சாம்பியன் போட்டியின்போது பார்வையாளர்களை மகிழ்விக்க குட்டிக்கரணம் அடித்த வீரர் ஒருவர் கழுத்து உடைந்து பலியானார்
பாடிபில்டர் சாம்பியன் போட்டியில் குட்டிக்கரணம் அடித்த வீரர் கழுத்து உடைந்து பலி-வீடியோ
Published on


தென் ஆப்பிரிக்காவில் பாடிபில்டர் சாம்பியன் போட்டிகளில் பலமுறை வெற்றிபெற்றவர் சிப்சே லுங்கலே தாபெத். சம்பவத்தன்று இவர் அங்குள்ள பிரபல நிறுவனத்தால் நடத்தப்படும் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

போட்டி துவங்குவதற்கு முன்னர் எஞ்சிய போட்டியாளர்களுடன் இவரும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது பார்வையாளர்கள் பலத்த ஆரவாரமிட்டு போட்டியாளர்களை ஊக்குவித்து வந்துள்ளனர்.

இதில் கவரப்பட்ட லுங்கலே பார்வையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டு குட்டிக்கரணம் அடித்துள்ளார்.

இதில் பின்பல்டி அடித்தபோது அவரது கட்டுப்பாட்டை இழந்து தலை தரையில் மோதியுள்ளது.

இதில் கழுத்து உடைந்து எந்த ஒரு சலனமும் இன்றி சனிக்கிழமை முழுவதும் சிகிச்சையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி லுங்கலேஉயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. குறித்த சம்பவம் தென் ஆப்பிரிக்கா பாடிபில்டர் குழுவினரையே மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com