தென்மண்டல பல்கலைக்கழக கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்


தென்மண்டல பல்கலைக்கழக கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
x
தினத்தந்தி 20 Dec 2025 9:00 AM IST (Updated: 20 Dec 2025 9:00 AM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

தென் மண்டல பல்கலைக்கழக பெண்கள் கைப்பந்து போட்டி சென்னையை அடுத்த அச்சரபாக்கத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். விவசாய கல்லூரி மைதானத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் (தமிழ்நாடு) 25-17, 25-20, 25-12 என்ற நேர்செட்டில் பாரதியார் பல்கலைக்கழத்தை (தமிழ்நாடு) வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்ததுடன் தொடர்ந்து 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

வேல்ஸ் பல்கலைக்கழகம் (தமிழ்நாடு) 2-வது இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் 3-வது இடத்தையும், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் (கேரளா) 4-வது இடத்தையும் பெற்றன. முதல் 4 இடத்தை பிடித்த அணிகள் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்கும் அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன.

1 More update

Next Story