ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்.....சாதனை படைத்த இந்திய அணி


ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்.....சாதனை படைத்த இந்திய அணி
x

கோப்புப்படம்  

தினத்தந்தி 23 Sept 2025 3:30 AM IST (Updated: 23 Sept 2025 3:30 AM IST)
t-max-icont-min-icon

ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் 13 முதல் 21 வரை சீனாவின் பெய்டைஹேயில் நடைபெற்றது.

பெய்டைஹே,

73-வது ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் 13 முதல் 21 வரை சீனாவின் பெய்டைஹேயில் நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப் டிராக் மற்றும் ரோடு போட்டிகளை உள்ளடக்கியது.

இதில் கொலம்பியா, சீன தைபே, ஸ்பெயின், இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, சிலி, எக்குவடார், ஜெர்மனி, பராகுவே, சீனா, தென் கொரியா, பெல்ஜியம் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனை பங்கேற்றனர்.

இந்த தொடரின் முடிவில் ஒட்டுமொத்தமாக 5 பதக்கங்களை இந்தியா வென்றது. அதில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் (வெள்ளிப் பதக்கங்கள் இல்லை) ஆகும். இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது.

இதன்மூலம் உலக வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

1 More update

Next Story