விளையாட்டுத்துறை விருதுகள்: விண்ணப்பங்கள் அடுத்த மாதம் முதல் வரவேற்க்கப்படும் - விளையாட்டு அமைச்சக அதிகாரி

விளையாட்டுத்துறை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் முதல் வரவேற்க்கப்படும் என்று விளையாட்டு அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை விருதுகள்: விண்ணப்பங்கள் அடுத்த மாதம் முதல் வரவேற்க்கப்படும் - விளையாட்டு அமைச்சக அதிகாரி
Published on

* விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் கேல்ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா விருதுகளுக்கான நடைமுறைகள் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். ஊரடங்கு காரணமாக இந்த நடைமுறை தள்ளிபோயுள்ளது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர், வீராங்கனைகளுக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த மாதம் முதல் வரவேற்க்கப்படும் என்று விளையாட்டு அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

* 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற சாதனையாளரான இந்திய இளம் வீராங்கனை அசாமை சேர்ந்த ஹிமாதாஸ் சமூக வலைதள உரையாடலில், எனது முன்மாதிரி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். ஒரு முறை அவர் என்னை தனது வீட்டுக்கு அழைத்து பேசிய போது, உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டேன். அவர் என்னை ஆறுதல் படுத்தினார். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் அதுவும் ஒன்று. என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com