இந்திய ஆக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் ? ஸ்ரீஜேஷ் அதிருப்தி

ஆக்கி இந்தியா அமைப்பு முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்திய ஆக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் ? ஸ்ரீஜேஷ் அதிருப்தி
Published on

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இந்திய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த கேரளாவை சேர்ந்த 38 வயது முன்னாள் கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ்சின் பதவி காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்தது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக வெளிநாட்டை சேர்ந்தவரை நியமிக்க ஆக்கி இந்தியா அமைப்பு முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு

ஸ்ரீஜேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

'ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுஎனது பயிற்சியாளர் பணி முடிவுக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது.இந்த காலகட்டத்தில் நாங்கள் 5 போட்டிகளில் விளையாடி,

ஜூனியர் உலகக் கோப்பை வெண்கலப்பதக்கம் உள்பட 5 பதக்கங்களை வென்றோம். மோசமான செயல்பாடுகளுக்கு பிறகு பயிற்சியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒரு வெளிநாட்டு பயிற்சியாளருக்கு வழிவிடுவதற்காக நீக்கப்படுவது இதுவே முதல் முறை' என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com