ஈட்டி எறிதலில் வரலாறு படைத்த இலங்கை வீரர்... நீரஜ் சோப்ராவின் சாதனை முறியடிப்பு

இது, உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களின் வரலாற்று பட்டியலில் அவரை எட்டாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது.
ஈட்டி எறிதலில் வரலாறு படைத்த இலங்கை வீரர்... நீரஜ் சோப்ராவின் சாதனை முறியடிப்பு
Published on

புது டெல்லி,

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் பத்திரகே, ரோம் டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீட்டர் தூரம் எறிந்து புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம் 2026 சீசனில் 90 மீட்டர் தூரம் எறிந்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

நீரஜ் சோப்ராவின் சாதனையை முறியடித்த பத்திரகே

வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில், பத்திரகே 92.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தியார். இதன் மூலம், கடந்த ஆண்டு நீரஜ் சோப்ரா தோஹா டைமண்ட் லீக்கில் பதிவு செய்திருந்த 90.23 மீட்டர் சாதனையை அவர் முந்தியுள்ளார். இது, உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களின் வரலாற்று பட்டியலில் அவரை எட்டாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது.

ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்திய இலங்கை வீரர்

முதல் சுற்றில் 84.49 மீட்டர் தூரம் எறிந்த அவர், இரண்டாவது சுற்றிலேயே 92.62 மீட்டர் என்ற அசாதாரண தூரத்தை பதிவு செய்து போட்டியின் திருப்புமுனையை ஏற்படுத்தினார். பின்னர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பவுலாக அமைந்தாலும், அந்த ஒரு எறிதலே அவருக்கு வெற்றியை உறுதி செய்தது.

ஆசிய விளையாட்டு போட்டியில் மும்முனைப் போட்டி?

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பத்திரகே, நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக ரோம் டைமண்ட் லீக்கில் பங்கேற்காத நீரஜ் சோப்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக மீண்டும் களம் திரும்புவார் என தெரிகிறது. இதனால் ஆசியாவின் மூன்று முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களுக்கிடையேயான மோதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com