மாநில விளையாட்டு போட்டி: முதல்-அமைச்சர் கோப்பையை அறிமுகப்படுத்திய உதயநிதி


மாநில விளையாட்டு போட்டி:  முதல்-அமைச்சர் கோப்பையை அறிமுகப்படுத்திய உதயநிதி
x

சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பையை அறிமுகப்படுத்தினார்.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை உள்பட 13 இடங்களில் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர் என 5 வகையான பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 30 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியின் அதிகாரபூர்வ தொடக்க விழா கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பையை அறிமுகப்படுத்தினார். அத்துடன் போட்டிக்கான தீபத்தையும் ஏற்றி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, துணைத் தலைவர் அசோக் சிகாமணி, பாரா பேட்மிண்டன் வீரர் சுதர்சன், ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story