பள்ளி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி - சென்னையில் நடக்கிறது

கோப்புப்படம்
பள்ளி அணிகளுக்கான மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வரும் 11ம் தேதி தொடங்குகிறது.
சென்னை,
அண்ணா நகர் அரிமா சங்கம் மற்றும் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி அணிகளுக்கான மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் ரூ.1½ லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுக் கோப்பை, பதக்கத்துடன் ரூ.10 ஆயிரமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.7 ஆயிரமும், மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு பரிசுக் கோப்பை, பதக்கத்துடன் ரூ.7 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.5 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் தங்களது பெயரை நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று போட்டி அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.முகமது ஜின்னா தெரிவித்துள்ளார்.






