

காகமிகஹரா,
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானில் உள்ள காகமிகஹரா நகரில் இன்று (வெள்ளிக்கி ழமை) முதல் ஜூன் 6-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 9 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், இந்திய ஆண்கள் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று கஜகஸ்தானுடன் (காலை 9.30 மணி) மோதுகிறது.