

பாசெல்,
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், இந்தோனேஷிய வீரர் ஜோனதான் கிறிஸ்டியுடன் மோதினார்.
55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 21-18 என்ற கணக்கில் முதல் செட்டை ஸ்ரீகாந்த், தன்வசமாக்கினார். எனினும் அடுத்த இரண்டு செட்டையும் கிறிஸ்டி 21-7, 21-13 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ஜோனதான் கிறிஸ்டி, இந்திய வீரர் பிரனாயுடன் மோத இருக்கிறார்.