சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த், பிரனாய் வெற்றி..!

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஸ்ரீகாந்த், பிரனாய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
image courtesy: Badminton Association of India via ANI
image courtesy: Badminton Association of India via ANI
Published on

பாசெல்,

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரர் கிறிஸ்டோபர் சென்னுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-16, 21-17 என்ற நேர் செட்டில் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் பிரனாய், சக நாட்டு வீரரான சாய் பிரனீத்துடன் மோதினார். 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனாய் 25-23, 21-16 என்ற நேர் செட்டில் பிரனீத்தை வீழ்த்தினார்.

மேலும் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, ஆல் இங்கிலாந்து சாம்பியனான இந்தோனேஷியாவின் முகமது சோஹிபுல் பிக்ரி- பாகஸ் மவ்லானா ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, 17-21, 21-11, 21-18 என்ற செட் கணக்கில் முகமது சோஹிபுல் பிக்ரி- பாகஸ் மவ்லானா ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com