சர்வதேச பேட்மிண்டன் போட்டி: ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் தோல்வி

21-23, 8-21 என்ற நேர் செட்டில் சியாவ் ஹாவ் லீயிடம், கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

லக்னோ,

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் 'ஒன் வீரர்' கிடாம்பி ஸ்ரீகாந்த் (இந்தியா) 21-23, 8-21 என்ற நேர் செட்டில் வெறும் 38 நிமிடங்களில் சியாவ் ஹாவ் லீயிடம் (சீனதைபே) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

உலக பேட்மிண்டனில் வெண்கலம் வென்றவரான இந்தியாவின் சாய் பிரனீத் 17-21, 15-21 என்ற நேர் செட்டில் கென்டோ நிஷிமோட்டோவிடம் (ஜப்பான்) தோற்று வெளியேறினார். அதே சமயம் பிரியன்ஷூ ரஜாவத், கிரண் ஜார்ஜ், சதீஷ்குமார் ஆகிய இந்தியர்கள் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையரில் இந்திய இளம் வீராங்கனை உன்னட்டி ஹூடா 15-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் ஆகர்ஷி காஷ்யப்பை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானின் நஜோமி ஒகுஹரா 18-21, 21-17, 21-10 என்ற செட் கணக்கில் இந்தியாவின் மாள்விகா பன்சோத்தை சாய்த்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com