டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகள் தோல்வி

அமெரிக் காவிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகள் தோல்வி
Published on

லண்டன்,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கி லாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான முதலாவது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் அமெரிக் காவிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

இந்திய வீராங்கனைகளில் மணிகா பத்ரா 2 ஒற்றையர் ஆட்டங்களில் ஆடி ஒன்றில் வெற்றியும், மற் றொன்றில் தோல்வியும் அடைந்தார். யாஷஸ்வினி கோர்படே, தியா சித் தாலே ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டனர்.

இந்திய ஆண்கள் அணி 0-3 என்ற கணக்கில் ஆஸ்திரே லியாவிடம் தோற்றது. இந்திய வீரர்கள் மனுஷ் ஷா, மானவ் தாக்கர், சத் யன் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வியை தழுவினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com