சென்னையில் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி


சென்னையில் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி
x

சென்னையில் 2 நாட்கள் போட்டி நடக்கிறது.

சென்னை,

3-வது தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி சென்னையில் நாளையும் (சனிக்கிழமை) நாளை மறுதினமும் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கும் இந்த சைக்கிள் போட்டிக்கான பந்தய தூரம் 2½ கிலோ மீட்டராகும். 12, 14, 18 வயதுக்குட்பட்டோர் மற்றும் ஆண்கள், பெண்கள் அனைத்து வயதினருக்கான போட்டி, குழு நேர போட்டி, கிரீன் ரைடு (பசுமை பயணம்) ஆகிய பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.

மேலும் நடப்பு சாம்பியன் கோவை பெடல்ஸ், நம்ம சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோ ரேசர்ஸ், குமரி ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், ரான்சைசர், திருச்சி ராக் போர்ட் ரைடர்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ் ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.

1 More update

Next Story