

சென்னை,
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர், வீராங் கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை.
ஜானிக் சினெர் (இத்தாலி) முதலிடத்திலும், கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 2-வதுஇடத்திலும். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 3-வது இடத்திலும், நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4-வது இடத்திலும், பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் (கனடா) 5-வது இடத்திலும் உள்ளனர். இதில் ஜோகோவிச் டாப்-5 இடத்திற்குள் 860 வாரங் கள் இருந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல் 5 இடத்திற்குள் 859 வாரங்கள் வகித்ததே சாதனையாக இருந்தது. அவரை ஜோகோவிச் முந்தினார்.