

பாங்காக்,
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் குன்லாவுத் விதித்சரனிடம் (தாய்லாந்து) மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 19-21, 16-21 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீரர் குன்லாவுத் விதித்சரனிடம் வீழ்ந்து வெளியேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத் விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டிச்-சிராக் ஷெட்டி இணை 21-12, 21-13 என்ற நேர் செட்டில் ஜப்பானின் தகுமி நோமுரோ-யூசி ஷிமோகமி ஜோடியை தோற்க டித்து அரையிறுதிக்கு முன்னேறியது.