

புதுடெல்லி,
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு மழை பொழிந்தன. ஈரான் உச்ச தலைவர் காமேனி தங்கியிருக்கும் இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் , அபுதாபி உள்ளிட்ட இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் பி.வி.சிந்து தனது பயிற்சியாளர் குழுவினருடன் பத்திரமாக நாடு திரும்பினார். பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கிய சிந்து வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'கடந்த சில நாட்கள் மிகவும் தீவிரமாகவும், நிச்சயமற்றதாகவும் இருந்தது. ஆனால் உண்மையிலேயே நான் நாடு திரும்பியதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கடினமான நேரத்தில் எங்களை நன்றாக கவனித்து கொண்ட துபாய் அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், குடியுரிமை அதிகாரிகள் உள்பட ஒவ்வொருவ ருக்கும் மனமார்ந்த நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.