பார்முலா1 பந்தயத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது - பிரான்ஸ் வீரர் உயிர் தப்பினார்

பார்முலா1 பந்தயத்தில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் பிரான்ஸ் வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பார்முலா1 பந்தயத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது - பிரான்ஸ் வீரர் உயிர் தப்பினார்
Published on

சகிர்,

பார்முலா1 கார்பந்தயத்தின் 15-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இலக்கை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். அப்போது அதிவேகமாக கிளம்பிய பிரான்ஸ் வீரர் ரோமைன் குரோஸ்ஜீன் (ஹாஸ் அணி) சென்ற கார் ஓடுபாதையையொட்டியுள்ள தடுப்பு மீது பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்தது.

காரில் இருந்து குதித்து வெளியே வந்த குரோஸ்ஜீன் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பாதுகாப்பு குழுவினர் அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனால் கொஞ்ச நேரம் நிறுத்தப்பட்டிருந்த இந்த பந்தயம் அதன் பிறகு தொடர்ந்து நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com