எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலி: சீன பொருட்கள் புறக்கணிப்பு

எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது.
எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலி: சீன பொருட்கள் புறக்கணிப்பு
Published on

* எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக, இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விவோ (சீனாவின் செல்போன் நிறுவனம்) முக்கிய ஸ்பான்சராக இருக்கிறது. சீனப்பொருள் விவகாரத்தில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிவுறுத்தல் வரும் வரை விவோவுடனான ஒப்பந்தம் மாற்றமின்றி தொடரும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்டர் மது தொட்டப்பில்லில், லடாக்கில் சீன ராணுவத்தினரின் திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காக திரட்டப்படும் பிரதமர் பராமரிப்பு நிதியை ஒப்பிட்டு விமர்சித்தார். இந்த சர்ச்சை கருத்து காரணமாக அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இந்த நிலையில் தொட்டப்பில்லில் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில், டுவிட்டரில் நான் பயன்படுத்திய வார்த்தைகள் பொருத்தமற்றது என்பதை உணர்ந்ததும் அதனை நீக்கி விட்டேன். நமது பிரதமரின் நடவடிக்கையையோ, மத்திய அரசையோ, ராணுவத்தையோ அல்லது அவர்களது தியாகத்தையோ சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு ஒருபோதும் கிடையாது. என்னுடைய டுவிட்டர் கருத்துக்காக அனைத்து தரப்பினரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com