குத்து சண்டை போட்டியில் துரோணாச்சார்யா விருது வென்ற முதல் பயிற்சியாளர் காலமானார்

குத்து சண்டை போட்டியில் துரோணாச்சார்யா விருது வென்ற முதல் பயிற்சியாளர் உடல்நல குறைவால் காலமானார்.
குத்து சண்டை போட்டியில் துரோணாச்சார்யா விருது வென்ற முதல் பயிற்சியாளர் காலமானார்
Published on

புதுடெல்லி,

இந்திய குத்து சண்டை போட்டியின் பழம்பெரும் பயிற்சியாளர் ஓ.பி. பரத்வாஜ். இவர் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், உடல்நல குறைவால் அவர் நேற்று (வெள்ளி கிழமை) காலமானார். அவருக்கு வயது 82.

இந்திய குத்து சண்டை போட்டியில் துரோணாச்சார்யா விருது வென்ற முதல் பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றவர். அவர், கடந்த 1968ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை தேசிய அளவில் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

அவரது மறைவுக்கு இந்திய குத்து சண்டை கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்து உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com