2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம்

கோப்புப்படம்
உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒலிம்பிக் போட்டி (2024ம் ஆண்டு), பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது. இதையடுத்து, 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளது. தொடர்ந்து, 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடக்க உள்ளது.
இதையடுத்து, 2036ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து கடந்த அக்டோபர் 1ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதி இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






