இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது.
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது
Published on

* கிரிக்கெட்டில் சீறி எழும்பும் பந்துகள் சிலசமயம் ஹெல்மெட்டோடு பேட்ஸ்மேன்களை பதம் பார்த்து விடுகிறது. இதனால் அவர்கள் நிலைகுலைந்து விடுவதும், சில நேரம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதிக்கப்படுவதும் அவ்வப்போது நடக்கிறது. இந்த மாதிரி பந்து தலையில் தாக்கி வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை பயன்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடைமுறை ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.

* ஆஷஸ் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் (24-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடக்கம்) ஆடுகிறது. இந்த போட்டிக்கான ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டியில் அதிரடியில் கலக்கிய தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் டெஸ்ட் அணிக்கு தேர்வாகி உள்ளார். அவர் டெஸ்டில் அறிமுக வீரராக அடியெடுக்க வைக்க இருக்கிறார்.

* இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 11-21, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஷோரியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சாய் பிரனீத், பிரனாய் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com