அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளராக பரத் சிங் செயல்பட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக முடிய வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
Image Courtesy : Twitter @Bharatchess64
Image Courtesy : Twitter @Bharatchess64
Published on

புதுடெல்லி,

அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளராக பரத் சிங் சௌகான் தேர்வு செய்யப்பட்டதை டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் நிறுத்தி வைத்து இருந்தது. இந்த நிலையில் பரத் சிங் சௌகான் ஆகஸ்ட் 15 வரை அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளராக செயல்பட சுப்ரீம் கோர்ட்டு இன்று அனுமதி அளித்துள்ளது

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த தொடர் சிறப்பாக முடிய வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அனிருத்தா போஸ் அடங்கிய அமர்வு கூறுகையில் "எங்களைப் பொறுத்த வரையில், தேசமும், தேசத்தின் பெருமையும் முதன்மையானது" என்று கூறியதுடன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை ஏஐசிஎஃப் செயலாளராக சவுஹானைத் தொடர அனுமதி அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com