

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கிரேக் பிராத்வெய்ட் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரும் ஆவார். சமீபத்தில் கிங்ஸ்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். அவர் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்குவது இது 2-வது முறையாகும். வருகிற 14-ந்தேதிக்குள் அவர் தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்த ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.